புதிய பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா..!

share on:
Classic

சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தனக்கு வழங்கப்பட்ட தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார்.

சி.பி.ஐ. இயக்குநராக பதவி வகித்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தானா ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சிபிஐ இயக்குநராக மீண்டும் அலோக் வர்மா பதவியேற்றார். இதனிடையே, அலோக் வர்மாவுக்கு முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக உயர்நிலைக் குழு, ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

இதையடுத்து, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய குழு இதுகுறித்து விவாதித்தது. இதையடுத்து, அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து நீக்கி நியமனக்குழு உத்தரவிட்டது. நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், அலோக் வர்மாவுக்கு தீயணைப்புத்துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அந்தப் பதவியை ஏற்க மறுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். வரும் 31ம் தேதி வரை பதவிக்காலம் இருந்த நிலையில் தனது பதவியை அலோக் வர்மா ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind