மீண்டும் சி.பி.ஐ. இயக்குநராக பொறுப்பேற்றார் அலோக்வர்மா!!!

share on:
Classic

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சி.பி.ஐ. இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குனர், ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவை, இடைக்கால இயக்குநராகவும் நியமித்தது. இதற்கு எதிராக அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என உச்சநீதிமன்றம் நேற்று  தீர்ப்பளித்தது. மேலும், மீண்டும் அலோக் வர்மாவிடம் சி.பி.ஐ. இயக்குநர் பொறுப்பை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வருகை தந்த அலோக் வர்மா, மீண்டும் சி.பி.ஐ. இயக்குராக பொறுப்பேற்று பணியை தொடங்கியுள்ளார்.      

News Counter: 
100
Loading...

aravind