மனைவியை விவாகரத்து செய்தாரா அமேசான் ஜெப் பெஜோஸ்..?

share on:
Classic

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெப் பெஜோஸ், அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஜெப் பெஜோஸ் (54) அவரது மனைவி மெக்கன்சி(48) இருவரும் பிரிந்து நண்பர்களாக வாழ போவதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெப் பெஜோஸூம், மெக்கன்சியும்  திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். தற்போது இவர்கள் பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஜெப் பெஜோஸ் இருவரும் பிரிந்து நண்பர்களாக வாழ போகிறோம். நாங்கள் தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் நாங்கள் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக, நண்பர்களாக, பணி திட்டங்களில் கூட்டாளிகளாக இணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டிருந்தார்.

அமேசான் நிறுவனத்தின் பெருமளவு பங்குகள் மெக்கன்சிக்கும் உள்ளன. இருவர் விவகாரத்தால் பங்குகளும் பிரியும், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் பிரிந்தால் அமேசான் நிறுவனத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

News Counter: 
100
Loading...

youtube