அமேசானில் இந்தியர்களுக்கு காத்திருக்கும் 1300 பணியிடங்கள்...!

share on:
Classic

புகழ்பெற்ற நிறுவனமான அமேசானில் வேலை செய்ய 1300 இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது அந்நிறுவனம். இந்தியர்கள் மிகவும் திறமைசாலிகள் என்பதே இதற்கு காரணம் என்கிறது அமேசான்.

இந்தியர்களுக்கு அழைப்பு :

இந்தியாவில் தற்போது அறிமுக படுத்தப்பட்டுள்ள கடுமையான வணிக சட்டங்களையும் மீறி புகழ்பெற்ற ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் தன் நிறுவனத்தில் பணியாற்ற அதிக அளவில் இந்தியர்களுக்கே அழைப்பு விடுத்துள்ளது. அமேசான் வலைதளத்தில் இருக்கும் புள்ளி விவரத்தின் படி ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியாவிற்கு தான் அதிக இடங்கள் ஒதுக்க பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி அதிகம் இருக்கும் சீனாவை விட இது மூன்று மடங்கு அதிகமாகும். ஜெர்மனிக்கும் இதே அளவில் தான் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

புதிய துறைகளில் நுழையும் அமேசான் :

பல்வேறு வேலைகளுக்கான பணியிடங்களில் மிக அதிகமாக 1300 இடங்களுக்கு இந்தியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த தொகை சினாவில் 476 ஆகவும், ஜப்பானில் 381 ஆகவும், ஆஸ்திரேலியாவில் 250 ஆகவும், சிங்கப்பூரில் 174 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் அமேசான் பண பரிவர்த்தனை, ப்ரைம் வீடியோ(content), அலெக்சா(Voice assistant), உணவு உற்பத்தி போன்ற பல புதிய துறைகளுக்குள் தன் வணிகத்தை பரப்பி வருகிறது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 6.1 லட்சம் ஆகும். 2018 ஆம் ஆண்டின் இறுதி வரை 60,000 இந்தியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது அமேசான். அதிலும் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் தான் அதிக அளவில் ஊழியர்கள் அமேசானிற்கு தேர்வாகின்றனர்.  
 

இந்தியர்கள் திறமைசாலிகள் :

அமேசான் செய்தி தொடர்பாளர் கூறும் போது "அமேசான் நிறுவனம் இந்தியாவை திறமைசாலிகள் வாழும்  நாடாக பார்க்கிறது. உலகளவில் மிக கடினமான வணிக சூழல்களை புதிய யுக்திகள் மூலம் எதிர்கொள்ளவே இந்தியாவுடன் கைகோர்க்கிறது அமேசான்" என்று கூறுகிறார்.
 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu