இந்தியாவில் புதிய சலுகைகளை வழங்கவுள்ள அமேசான் பிரைம்

share on:
Classic

இந்த ஆண்டு இந்தியாவில் அதிகபட்ச சலுகைகளை அமேசான் பிரைம் வழங்கவுள்ளது. 

கடந்த 18 மாதங்களில் அமேசான் பிரைம், இந்திய சந்தாதாரர்களை இரெட்டிப்பாக்கியுள்ளது. சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களிலிருந்து 50% புதிய உறுப்பினர்கள் அமேசான் பிரைமை சப்ஸ்கிரைப் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் அதன் உள்நாட்டு சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த சேவை இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. வீடியோக்கள் மற்றும் மியூசிக் ஸ்ட்ரீமிங், e-tail போன்ற சேவைகளை அமேசான் பிரைம் வழங்குகிறது. 

அமேசான் பிரைம் தற்போது ஆண்டு சந்தாவாக ரூ .999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 நாடுகளில் நேரலையில் இயங்கும் இந்த திட்டம், சமீபத்தியது ஐக்கிய அரபு அமீரகத்திலும் அமேசான் பிரைம் அதன் சேவையை வழங்கிவருகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் அதிகபட்ச சலுகைகள் மற்றும் புதிய தயாரிப்புகளை அமேசான் பிரைம் வழங்கவுள்ளது.

News Counter: 
100
Loading...

udhaya