தமிழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

share on:
Classic

தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் 128-வது பிறந்த தினம், கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அம்பேத்கரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் பிறந்தநாளை யொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு திமுக வேட்பாளர் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல், தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளருமான தமிழிசை சௌந்திரராஜனும், அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan