சிரியாவில் உள்ள படைகளை அமெரிக்கா திரும்பப் பெறக் கூடாது : குர்து கிளர்ச்சியாளர்கள்

share on:
Classic

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள படைகளை அமெரிக்கா திரும்ப பெற கூடாது என்று குர்து கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஈராக்கில் உள்ள குர்து படைத்தலைவர் பர்சானி இது குறித்து பேசிய போது, “இன்னும் இந்த பகுதிகளில் ஐஎஸ் இயக்கம் அச்சுறுத்தல் தரும் இயக்கமாக தான் இருக்கிறது. மொசூல் உள்ளிட்ட ஈராக்கின் வடக்கு பகுதிகளில் அந்த இயக்கம் இன்றும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே அமெரிக்கா தங்கள் படைகளை திரும்ப பெறக் கூடாது” என்று தெரிவித்தார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான படைகள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நடைபெற்று வரும் உள்நாட்டு போர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம், சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதால், அங்குள்ள அமெரிக்க ராணுவம் வெளியேறும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya