அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் - 2 பேர் பலி..!!

share on:
Classic

அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கரோலினாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டின் இறுதி நாள் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியோடு வகுப்பறையில் இருந்தனர். அப்போது அங்கு படிக்கும் டிரிஸ்டான் ஆண்ட்ரூ டெர்ரல் என்ற மாணவர் திடீரென அவர் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மாணவர்களை சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கு சூட்டில் சம்பவ இடத்திலேயே 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

மேலும் 4 நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த சம்பவத்தையடுத்து தகவல் அறிந்த போலிஸார் உடனடியாக பல்கலைகழகத்திற்கு வந்து அங்கு துப்பாக்கி சூடு நடத்திய மாணவரை கைது செய்தனர். சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan