அமெரிக்க தலைநகரில் வெள்ளப்பெருக்கு..! மக்கள் அவதி...

share on:
Classic

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் திடீரென பொய்த கனமழை பெய்தது. 3 அங்குலம் அளவுக்கு பெய்த கனமழை காரணமாக, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் சூழ்ந்தது. கனமழை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அமைந்துள்ள பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மழை நீரில் மூழ்கின. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan