பாகிஸ்தான் ஆடு மேல் கை வைத்ததற்காக, 78 லட்சம் கட்டிய இளைஞர்...!!

share on:
Classic

பாகிஸ்தானின் தேசிய விலங்கான 'மார்கோர்' ஆட்டை வேட்டையாடிய வெளிநாட்டு இளைஞர் ஒருவர் 78 லட்சம் அபராதம் காட்டியுள்ளார்.

வேட்டையாடு ...விளையாடு :
நீண்ட முடியோடு கூடிய  வளைந்த கொம்புகளை உடைய இந்த மார்கோர் ஆடுகள் மலை பகுதிகளில் தான் காணப்படுகிறது. பார்க்கவே மிகவும் பிரமாண்டமாக இருக்கும் இந்த ஆடுகளை வேட்டை ஆடுவது அங்கு ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது. பாகிஸ்தானில் அடிக்கடி மார்கோர் ஆடுகளை வேட்டையாடும் போட்டிகள் நடத்தப்படுவதுண்டு. இதில் உலகம் முழுவதும் இருந்து வேட்டையாடுவதில் ஆர்வமுள்ள பலர் கலந்து கொள்கின்றனர்.

 

78 லட்சம் ! 
சமீபத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்த வகை ஆடுகளை வேட்டையாட அமெரிக்காவைச் சேர்ந்த 'பிரயான் ஹர்லான்' என்ற இளைஞர் பலுசிஸ்தான் வனத்துறைக்கு 110,000 டாலர்களை அபராதமாக செலுத்தியுள்ளார். இந்திய ருபாய் அளவில் இது 78 லட்சத்து  65 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுவரை செலுத்தப்பட்டதிலேயே இது தான மிக அதிக கட்டணம்.இதற்கு முன்பு   டயானா கிறிஸ்டோபர் என்ற அமெரிக்கா இளைஞர் 105,000 டாலர்களை செலுத்தியது தான் அதிகப்படியாக இருந்தது.

 

கிராம மக்கள் கோரிக்கை :
பாகிஸ்தானின் மலைகளில் தான் இந்த வகை ஆடுகள் அதிகம் காணப்படுகிறது. எனவே இந்த போட்டிகளில் கிடைக்கும் பணத்தை மலை கிராம மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. ஆனால் இந்த வேட்டையாடும் போட்டிகளால் மார்கோர் வகை ஆடுகளின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவற்றை பாதுகாக்கும்  நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். 

 

News Counter: 
100
Loading...

priya