இந்தியாவின் தற்போதைய இரும்பு மனிதர் அமித்ஷா தான் - முகேஷ் அம்பானி

share on:
Classic

இந்தியாவின் தற்போதைய இரும்பு மனிதர் அமித்ஷா என்று ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

பெட்ரோலிய பல்கலை கழகத்தின் 7 -வது ஆண்டு பட்டமளிப்பு விழா காந்தி நகரில் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முகேஷ் அம்பானி பேசுகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு கர்ம யோகி அதுமட்டுமின்றி இந்தியாவின் இரும்பு மனிதர் என தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்தியாவும்  உங்களை போன்ற தலைவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. உங்களுக்க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan