மம்தா பானர்ஜியுடனான மோதலின் 2-வது அத்தியாயத்தை தொடங்கிய அமித் ஷா..!!

share on:
Classic

மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ள நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடனான மோதலின் 2-வது அத்தியாயத்தை அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார்.

பா.ஜ.க நேரடியாக ஆதிக்கம் செலுத்த முடியாத மாநிலங்களில் ஒன்றாக தமிழகம், கேரளாவுக்கு அடுத்தபடியாக மேற்குவங்காளமும் உள்ளது. 2014 ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சிக் பொறுபேற்ற பிறகு இந்த 3 மாநிலங்களிலும் ஆதிக்கம் செலுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. பா.ஜ.கவின் முயற்சிகளுக்கு எந்த இடத்திலும் வாய்பளிக்காமல், மம்தா பானர்ஜி தனது கடும் எதிர்ப்பை அனைத்து இடங்களிலும் பதிவு செய்து வந்தார். குறிப்பாக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், மோடி, அமித்ஷா மற்றும் மம்தா பானர்ஜி இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்றது.

மேலும், மேற்கு வங்கத்தில் அமித்ஷாவின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, அவரது பேரணியில் வெடித்த கலவரம் உள்ளிட்டவை, திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க எதிர்ப்பின் தீவிரத்தை வெளிக்காட்டியது.

இந்நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவில் அம்மாநிலத்தில் பா.ஜ.க 18 இடங்களை கைப்பற்றியது. டெல்லியில், தேர்தல் முடிவுக்கு பிறகு நேற்று பா.ஜ.க தொண்டர்களிடையே உரையாற்றிய அமித் ஷா, கடுமையான எதிர்ப்பு மற்றும் வன்முறைக்கு இடையே மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 18 இடங்களை பிடித்துள்ளதாக தெரிவித்தார். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், பா.ஜ.க அதனை முறியடித்து அம் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், மம்தா உடனான மோதலை அமித்ஷா மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan