அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு..!

share on:
Classic

நடிகர் அமிதாப் பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 36 ஆண்டுகளாக தன் ரசிகர்களையும், நல விரும்பிகளையும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்து வருகிறார். 76 வயதான அவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய நேற்றைய ரசிகர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், உடல் நல பாதிப்பால் படுக்கையில் இருப்பதாகவும் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அவர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளதாக அனைவரிடமும் தெரிவியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan