close
முகப்புதீவிரசிகிச்சைக்காக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி 

தீவிரசிகிச்சைக்காக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி 

தீவிரசிகிச்சைக்காக அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி 

அமிதாப்பச்சன் பாலிவுட் சினிமாவின் அடையாளம் என்றே சொல்லலாம் இவரும் இவரது குடும்பமும் தொடர்ச்சியாக சினிமா துறையில் பணியாற்றி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.

வருடங்கள் பல கடந்தும் அடுத்தடுத்த தலைமுறையினருடன் நடித்து வரும் அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பு தளத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு தற்போது வயது 75 ஆகிறது இவர் இப்பொது ''102 notout'' என்ற படத்தில் நடித்து வருகிறார் 
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு பாலிவுட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க உள்ள அமிதாப் ரசிகர்கள் அனைவரும் வரவேற்பு அளித்தனர்.

விறுவிறுப்பாக நடந்துவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திடீரென நேற்று அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது அதனை அடுத்து இன்று தனது மருத்துவர்களுடன் படப்பிடிப்புக்கு சென்ற அமிதாப்க்கு இன்றும் அதே நிகழ்வு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.