சிறப்பான செய்தியாளர் சந்திப்பு : மோடி பதிலளிக்காதது குறித்து ராகுல் கிண்டல்..!!

share on:
Classic

மோடியின் முதல் ஊடக சந்திப்பை சிறப்பான செய்தியாளர் சந்திப்பு  என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்க மறுத்துவிட்ட மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் “ சிறப்பான செய்தியாளர் சந்திப்பு, மோடிக்கு எனது வாழ்த்துக்கள்..!! அடுத்த முறையாவது அமித்ஷா 2 கேள்விகளுக்காவது பதிலளிக்க அனுமதிப்பார்” என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். தனது 5 ஆண்டுகளில் முதன்முறை செய்தியாளர்களை சந்தித்த மோடி, கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இது பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மோடியிடம் நேரடியாக கேள்வி கேட்கப்பட்ட போது, நான் ஒழுக்கமான படைவீரர் என்பதால், பாஜக தலைவரின் முன்பு நான் பதிலளிக்கமாட்டேன் என்று தெரிவித்தார். 

இதனிடையே அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் செய்தியாளர்களை சந்தித்தார். ரஃபேல் குறித்த விவாதம் செய்ய மோடி தயாரா என்று ராகுல் மீண்டும் மோடிக்கு சவால் விடுத்தார்.  

News Counter: 
100
Loading...

Ramya