உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா புதிய சாதனை..!

share on:
Classic

ஆம்லா நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்களை கடந்ததன் மூலம் விரைவாக 8,000 ரன்கள் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனை பதிவுசெய்துள்ளார்..

நடந்து வரும் உலகக்கோப்பை தொடர் பர்மிங்காம் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது. அதில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்து தென்னாப்பிரிக்க அணியை பேட் செய்ய அழைத்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஆம்லா 25 ரன்களை கடந்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில் விரைவாக 8,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் இந்திய வீரர் கோலி 175 ஆட்டங்களில் 8,000 ரன்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார். இந்நிலையில் ஆம்லா 176 ஆடட்ங்களில் 8,000 ரன்களை கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் 8,000 ரன்களை கடந்த 4-வது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.         
 

News Counter: 
100
Loading...

vinoth