பழங்கால ஜைன மலை குகை கோயில்..!!

share on:
Classic

சுற்றுலாத் தளங்களில் ஒன்றான பழங்கால ஜைன மத பாறையினால் ஆன சிற்பங்கள் நிறைந்த குகைக் கோயிலை பற்றி காணலாம்.

மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது. முன்னாளில் திருசரணத்துப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இந்த ஊா் திகம்பர ஜைன மத துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்தது. இங்கு மலை உச்சியில் உள்ள குகையில் உள்ளேயும் வெளியேயும் 9 ம் நூற்றாண்டைச் சோ்ந்த தீா்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் முதலாம் மகேந்திரவா்மனின் உதவியால் ஜைன மதம் வளா்ந்தது.

13 ம் நூற்றாண்டில் இந்த குகை பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது. இந்த சிதரால் மலை சொக்கன் தூங்கி மலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள சிதரால் குகை அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல் கொண்டது. இங்கு 9 ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan