உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீத தனியார் வேலைகளை ஒதுக்கி ஆந்திர அரசு அதிரடி..!

share on:
Classic

தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 75 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பேற்ற பிறகு அம்மாநிலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக ஆந்திர மாநிலத்தவர்களுக்கு 75 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan