உலகக்கோப்பையில் இருந்து ரஸல் விலகல்

share on:
Classic

உலகக்கோப்பை தொடரில் இருந்து மேற்கு இந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் காயம் காரணமாக விலகியுள்ளார். 

12-வது உலகக்கோப்பை தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஐசிசி தரவரிசைப்படி முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் உலகக்கோப்பையில் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த முக்கிய வீரர் ஆண்ட்ரே ரஸல் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுனில் அம்ப்ரிஸ் அணியில் இணைய உள்ளார்.

News Counter: 
100
Loading...

Saravanan