அனில் அம்பானிக்கு அடித்தது ஜாக்பாட் : ரூ. 648 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தம்..

share on:
Classic

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு, குஜராத் மாநிலத்தில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு ரூ. 648 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தில் உள்ள ஹிராசர் என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. அகமதாபாத் - ராஜ்காட்டை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இந்த புதிய விமான நிலையம் கட்டப்பட உள்ளது. லார்சன் & டர்போ, திலீப் பில்ட்கான், காயத்ரி ப்ராஜக்ட்ஸ் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் பங்கேற்ற  ஏலத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்  இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 648 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு இந்தியா விமானநிலைய ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 30 மாதத்திற்குள் அந்த விமான நிலையம் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் உள்ளது. ராஜ்காட் பகுதி மக்கள் மற்றும் அண்டை மாநில மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த புதிய விமான நிலையம் அமைய உள்ளது. 

 

News Counter: 
100
Loading...

Ramya