மகளிருக்கான சர்வதேச டென்னிஸ்: அன்னா கரோலினா சாம்பியன் பட்டம்

Classic

கொலம்பியாவில் நடைபெற்ற மகளிருக்கான சர்வதேச டென்னிஸ் தொடரில் லாரா-வை வீழ்த்தி அன்னா கரோலினா சாம்பியன் பட்டம் வென்றார். ஒற்றையர் பிரிவில் இவர் வெல்லும் 3வது பட்டம் இதுவாகும்.

பட்டம் வென்றால் 280 சர்வதேச தரப்புள்ளிகளை பெற்றுத்தரும் மகளிருக்கான சர்வதேச டென்னிஸ் தொடரானது கொலம்பியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் தரவரிசையில் 132வது இடத்திலுள்ள 23 வயதான ஸ்லோவேக்கிய வீராங்கனை அன்னா கரோலினா , போட்டி தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை லாராவுடன் பலப்பரீட்சை நடத்தினார். 

இந்த போட்டியில் முதல் செட்டிலேயே முன்னணி வீராங்கனையான லாராவுக்கு கடும் சவால் அளித்தார் அன்னா கரோலினா. முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய அன்னா கரோலினா அதனை 6-2 என தனதாக்கி முன்னிலை பெற்றார். 

தொடர்ந்து 2வது செட்டிலும் அன்னா கரோலினாவின் ஆதிக்கமே இருந்தது. அதிரடியாக விளையாடிய அன்னா கரோலினா புள்ளிகளைபெற, சுதாரித்த லாரா தன் பங்குக்கு புள்ளிகளை சேர்த்தார். இருப்பினும், அதனை 6-4 என அன்னா கரோலினா கைப்பற்றி நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் அன்னா கரோலினா வெல்லும் 3வது பட்டம் இதுவாகும். முன்னதாக, 2015ஆம் ஆண்டில் போலந்து மற்றும் ருமேனியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தகக்து.

News Point One: 
மகளிருக்கான சர்வதேச டென்னிஸ் தொடரில் அன்னா கரோலினா சாம்பியன் பட்டம்
News Point Two: 
5வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை லாராவுடன் போட்டி
News Point Three: 
அன்னா கரோலினா வெல்லும் 3வது பட்டம்
News Counter: 
200

Parkavi