அண்ணா பல்கலைக்கழகத்தில், 94-வது முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா..!

share on:
Classic

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், 94-வது ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் இன்று 94-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் துணைவேந்தர் சூரப்பா கவுரவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற அனைவரும் நல்ல நிலைமையில் உள்ளதாகத் தெரிவித்தார். நிகழ்ச்சி முடிவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News Counter: 
100
Loading...

Ragavan