மற்றொரு காலணியும் என்னை தேடி வரும் : வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கமல்ஹாசன் கருத்து..

share on:
Classic

காலணி வீச்சுக்கு தான் அருகதை உள்ளவன் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், தான் திரும்ப திரும்ப படிக்கும் வரலாறு காந்தியடிகள் என கூறினார். ரயில் பயணத்தின்போது காந்தி தவறவிட்ட ஒற்றை செருப்புக் கதையை கூறிய கமல்ஹாசன், ஒரு காலணி வந்துவிட்டதாகவும், மற்றொரு காலணியும் தன்னை தேடி வரும் எனவும் கூறினார். காலணி வீச்சுக்கு பயந்து தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன் என கூறிய அவர், வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது என கோட்சே குறித்து சூசகமாக தெரிவித்தார்.

முன்னதாக கோட்சே இந்து தீவிரவாதி என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பங்கேற்ற பிரச்சார கூட்டங்களில் காலணி வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

News Counter: 
100
Loading...

Ramya