இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கும் அனுபமா..!!

share on:
Classic

ராச்சசுடு படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார் அனுபமா.

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் தான் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளத்தில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெளியான ராட்சசன் படம் தெலுங்கில் ராச்சசுடு என்ற பெயரில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது, இந்த படத்தில் அனுபமா ஹீரோயினாக நடித்துள்ளார்.

அனுபமாவுக்குத் திரைப்பட இயக்குவதில் அதிக ஆர்வம் இருக்கிறது. படம் இயக்கியே தீருவேன் என்று துடிப்பாக இருந்த அனுபமா, இப்போது நடிப்புக்குச் சிறிது காலம் இடைவேளை விட்டு இருக்கின்றார்.துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் விரைவில் இயக்குனராகவும் மாற உள்ளார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan