'விஸ்வாசம்' படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

share on:
Classic

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வாசம் படத்தை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விநியோகஸ்தரான சாய்பாபா, கடன் தொகையை செலுத்த வில்லை எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது. அதில், 78 லட்சம் ரூபாய் கடன்பாக்கியை திருப்பி செலுத்தாததால் விஸ்வாசம் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

சினிமா பைனான்சியர் உமாபதி தொடர்ந்த இந்த வழக்கில், கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஏரியாக்களில் விஸ்வாசம் படத்தை திரையிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி, விஸ்வாசம் படத்தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

அதில், கடன் தொகையில் 35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதமுள்ள தொகையை 4 வாரத்திற்குள் அளிப்பதாகவும் படத்தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் தங்களது கோரிக்கையை, மனுவாக தாக்கல் செய்தால் வழக்கை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind