புத்தாண்டை முன்னிட்டு Apple iPhone X அதிரடி ஆஃபர்..!

share on:
Classic

ஆப்பிள் நிறுவனம் 2018 ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால் அதனை கொண்டாடும் வகையில் Apple iPhone Xல் ஆஃபர் ஒன்றை அளித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

பொதுவாக ஆப்பிள் ஐபோன் என்றாலே பலருக்கு அலாதி பிரியம். பல நடுத்தர குடும்பங்களுக்கு கூட அது பெரும் கனவாக, லட்சியமாக இன்றளவும் இருக்கிறது. ஆப்பிள் ஐபோன்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆண்ட்ராய்டு நிறுவங்கள் போட்டி போட்டு கொண்டாலும் ஆப்பிள் மீதான பலரது காதல் குறைந்தபாடில்லை.

ஆப்பிள் நிறுவன தயாரிப்பில் 3GB RAM, 64GB ஸ்டோரேஜ், 12 MP டூயல் கேமரா, 7MP முன்பக்க கேமரா, 458 PPI டிஸ்பிலே என அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது Apple iPhone X. புத்தாண்டை முன்னிட்டு இதன் விலை ரூ.91,900லிருந்து 18 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.74,999க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் பல நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind