ஆப்பிள் CEO-வின் 2018-ம் ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா..? அடேங்கப்பா..!

share on:
Classic

ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை அதிகாரியான டிம் குக்கின் 2018-ம் ஆண்டிற்கான வருமான விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல டெக் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியாக டிம் குக் உள்ளார். இந்த வருடம் டிம் குக்கிற்கு ஆப்பிள் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு போனஸ் கொடுத்து அசத்தியுள்ளது. அவருக்கு எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் 12 மில்லியன் டாலரை போனஸாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளார் டிம் குக்.

முந்தைய வருடம் 9.3 மில்லியன் டாலர் போனஸ் பெற்ற இவர், கடந்த ஆண்டு விற்பனையில் அதிக முன்னேற்றம்  ஏற்படுத்தியதாக இந்த போனஸ் கொடுத்ததாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அவருடைய வருமானத்திலிருந்து 22 சதவீதம் வருமான உயர்வையும் டிம் குக் பெற்றுள்ளார். மேலும் இவருடைய ட்ராவல் மற்றும் செக்யூரிட்டி அலவன்ஸ் என 6,82,000 டாலர்கள் பெற்றுள்ளார். கடந்த வருடத்தில் மட்டும் இவர் மொத்தமாக 131 மில்லியன் டாலர்களை அதாவது  இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.9,58,39,88,000 வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

youtube