ஆப்பிள் ஐபோனில் இப்படி ஒரு வசதியா..!

share on:
Classic

ஆப்பிள் புதிய ஐபோன்(iPhone) மற்றும் iPad OS-ன் பீட்டா வெர்ஷனை வெளியிடுகிறது.

புதிய வரவான ஆப்பிள் ஐபோன் மற்றும் iPad இயக்க முறைகள் (OS), iOS 13 மற்றும் iPad OS 13 ஆகியவற்றின் முதல் பொது பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது. இதன் சோதனை பதிப்புகளை அனைவருக்கும்  பதிவிறக்கம் செய்து சோதனை செய்து பார்க்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஐபோன் மற்றும் iPad-களின் இறுதி பதிப்பு இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பீட்டா பதிப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், பீட்டா பதிப்புகளை அவற்றின் முதன்மை ஐபோன்கள் மற்றும் iPad-களில் நிறுவ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஐபோன்களின் விர்ச்சுவல் அசிஸ்டெண்டான(virtual assistant) ’சீரி’ இந்திய-ஆங்கிலம் உச்சரிப்பில் பேசும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும் இயல்பான மற்றும் வெளிப்படையான முறையில் பேசும் ’சீரி’ ஆண் மற்றும் பெண் குரல்களில் பேசும் திறன் கொண்டது. iOS 13, ஆப்(app) பதிவிறக்க அளவுகளை 50% வரை குறைத்து, ஆப் அப்டேட்ஸை (app updates) 60 % சிறியதாக மாற்றுவதால் ஐபோன் மற்றும் iPad-களில் ஆப்பின் பயன்பாடு இரு மடங்கு வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.           

News Counter: 
100
Loading...

udhaya