ஜூன் 6 முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம்..!

share on:
Classic

தமிழகத்தில் ஜூன் 6-ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

நடப்பாண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன. இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜூன் 6-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tn.health.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan