நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க ஒப்புதல்..!

share on:
Classic

சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்கத்தில் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. 

தற்போது, அந்த 6 மாதகால அவகாசமும் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind