அரபு, ஆங்கிலம் வரிசையில்அபுதாபியில் நீதிமன்ற அலுவல் மொழியான ஹிந்தி!!

share on:
Classic

அரபு, ஆங்கிலம் ஆகிய வரிசையில் தற்போது ஹிந்தி மொழி அபுதாபி நீதிமன்ற அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால் வெளிநாட்டு தொழிலாளர் தொடர்பான வழக்குகளில் ஹிந்தி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வழக்குகள் தொடர்பான மனுக்களை தாக்கல் செய்தல், உரிமை கோருதல் ஆகியவற்றில் அரபி, ஆங்கிலத்தை தொடர்ந்து ஹிந்தி மொழியையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம் அபுதாபியில் உள்ள ஹிந்து பேசும் மக்கள், சட்ட நடைமுறைகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் கடமை மற்றும் உரிமைகளை அவர்களது மொழிகளிலேயே தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அபுதாபி நீதித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya