இந்தியாவுக்கு திரும்புகிறார்களா ஹர்திக் பாண்ட்யா, KL ராகுல்..?

share on:
Classic

பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசிய இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் இருவரையும் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய பிசிசிஐ, இருவருக்கும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க பரிந்துரை செய்தது. இந்தத் தடைக்கு பிசிசிஐ பொருளாளர் அனிருத் சவுத்ரியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரையும் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind