உலககோப்பை ஹாக்கி போட்டியில், ஸ்பெயினை வீழ்த்தியது அர்ஜென்டினா, மற்றொரு போட்டியில் நியூசிலாந்து வெற்றி

share on:
Classic

உலககோப்பை ஹாக்கி போட்டியில், அர்ஜென்டினா அணி, ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்ததால், ஆட்டத்தில் அனல் பறந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. அந்த அணியின், அகஸ்டின் மாசெல்லி, பெய்லாட் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

மற்றொரு ஆட்டத்தில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து - ஃபிரான்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணி, 2க்கு 1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது.

News Counter: 
100
Loading...

sasikanth