உறைபனியால் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்..!

share on:
Classic

ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனியில் ஹெலிகாப்டர்களைக் கொண்டு மரத்தின் மீதுள்ள உறைப்பனி அகற்றப்பட்டு வருகிறது. 

கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் பனிப்புயலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் பனிப்பொழிவின் அளவு அதிகரித்து வருகிறது. மேலும் மரங்கள் மீது அதிக அளவிலான பனி கொட்டித்தீர்ப்பதால், மரங்கள் உடைந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் மூலம் மரங்கள் மீதுள்ள பனியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஜெர்மன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரங்களின் மீது சேர்ந்துள்ள உறைப்பனி ஹெலிகாப்டர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர் பறக்கும் வேகத்தில், அது சுழன்றடிக்கும் காற்றினால் பனிக்கட்டிகள் கீழே விழவைக்கப்படுகின்றன. 

News Counter: 
100
Loading...

aravind