ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை..!!

share on:
Classic

சென்னையில் ராணுவ அதிகாரியை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷி ஹவில்தார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்குக் கீழ் ரைபிள் மேனாக பணியாற்றி வந்த ஜெக்தீர் என்பவருக்கும், பிரவீன்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரைபிள் மேன் ஜெக்தீர், பிரவீன்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பல்லாவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

vinoth