ராணுவ வீரர் பாதுகாப்பாக உள்ளார் - மத்திய பாதுகாப்பு அமைச்சகம்

share on:
Classic

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் கடத்தப்பட்டதாக வெளிவரும் தகவல் உண்மையான செய்தி இல்லை எனவும் அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்கம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த முகமது யாசின் என்ற ராணுவ வீரர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார் என்று செய்தி வெளியானது. அவர் 1 மாத விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த போது அடையாளம் தெரியாத தீவிரவாதியால் கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் “ புட்கம், சாதூரா, காசிபுரா ஆகிய இடங்களில் இருந்து ராணுவ வீரர் கடத்தப்பட்டார் என்று ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை. ராணுவ வீரர் பாதுகாப்பாக உள்ளார். தவறான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Ramya