சன்னி லியோனை பாஜக வேட்பாளராக்கிய அர்னாப் கோஸ்வாமி...

share on:
Classic

பாஜக வேட்பாளரின் பெயருக்கு பதிலாக கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் பெயரை உச்சரித்ததால் அர்னாப் கோஸ்வாமி நெட்டிசன்களின் பார்வையில் சிக்கியுள்ளார். 

தனியார் டிவி சேனலில் மக்களவை தேர்தல் தொடர்பான சிறப்பு நேரலை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை பிரபல விவாத நிகழ்ச்சிக்கான நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். பாஜக வேட்பாளரும் பாலிவுட் நடிகருமான சன்னி டியோலின் முன்னிலை நிலவரம் குறித்து அர்னாப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ’சன்னி டியோல்’ என சொல்வதற்கு பதிலாக ’சன்னி லியோன்’ என தவறுதலாக சொல்லி விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், அர்னாபின் உலறல் குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ’எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் தாம் முன்னிலையில் உள்ளேன்?’ என கிண்டல் செய்யும் தொனியில் வினா எழுப்பியுள்ளார். ’விவாத நிகழ்ச்சிக்கு வருபவர்களை தலைதெறிக்க விட்ட அர்னாப்பிற்கே இந்த நிலைமையா?’ என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

News Counter: 
100
Loading...

mayakumar