நாளை மறுநாள் தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்...

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு, 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 2-ஆம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களுக்குட்பட்ட 97 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 160 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், இறுதிக் கட்டத்தில் நடைபெறும் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசாரின் விழிப்புணர்வு அணிவகுப்பும் நடைபெற்று வருகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan