காதலிப்பவர்கள் மட்டும் இதை படிங்க...!

Classic

பிப்ரவரி மாதம் என்றாலே காதலர்களுக்கு குதூகலம் தான். ஏற்கனவே காதலிப்பவர்களுக்கு மட்டும் அல்ல, புதிதாக காதலை சொல்ல காத்திருப்பவர்களுக்கும் கூட, இந்த பிப்ரவரி 14-க்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.  காதலை கொண்டாட உருவாக்கபட்ட இந்த தினத்தை பற்றி உங்களுக்கு வேறு ஏதாவது தெரியுமா? சொல்கிறேன் கேளுங்க. 

 காதலர் தினம் உருவானதை பற்றி பல கதைகள் உலா வருகிறது. அதில் மிகவும் சுவாரசியமான இரண்டு கதைகளை மட்டும் சொல்கிறேன்.அந்த நாட்களில் ரோமில் வாழ்ந்த ஒரு பாதிரியாரின் பெயர் தான் 'வேலன்டைன்'. அப்போது அங்கு இருந்த அரசர் 'கிளாடியஸ்' என்பவர், ஆண்கள் யாரும் திருமணம் செய்யாமல் ராணுவத்தில் இணைய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தாராம். ஆனால் அந்த கொடுமையான சட்டத்திற்கு பயப்படாமல் பல ரகசிய திருமணங்களை நடத்த ஆரம்பித்தாராம் வேலன்டைன். இதை கண்டுபிடித்த அரசர் அவரை பிடித்து கொன்றுவிட்டாராம். அந்த காதல் தேவதையின் நினைவாகத் தான், அந்த நாள் இன்றும் கூட 'காதலர் தினம்' என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இன்னொரு கதை என்னவென்றால், பிப்ரவரி மாதம் நடுவில் 'ரோம்' நாட்டில் கொண்டாடப்பட்டு வந்த 'உழவு  திருவிழா'வின் போது அங்குள்ள பெண்களின் பெயர்களை எல்லாம் எழுதி ஒரு குடுவையில் குலுக்கி போடுவார்களாம். ஆண்கள் ஒவ்வொருவராக வந்து அதில் ஒரு சீட்டை எடுக்க, அதில் வரும் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்த வேண்டுமாம். இந்த விழா தான் தொன்றுதொட்டு காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ நல்லது நடந்தால் சரி என்று பெருமூச்சு விடுகின்றனர் காதலர்கள்.
 

News Counter: 
100
Loading...

youtube