லேசர் மூலம் செயற்கை மின்னல் உருவாக்கம்..இயற்பியல் வரலாற்றில் சாதனை..!

share on:
Classic

உலகின் முதன் முதலாக லேசர் அலைக்கற்றை மூலம் செயற்கை மின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் இருண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறி  கீற்றலே மின்னல். அதை லேசர் மூலம் செயற்கை முறையில் உருவாக்குவது எவ்வகையில் சாத்தியம் என்பதை இதில் காண்போம். 

மின்னல் : 

கண்ணைப் பறிக்கும் வெளிச்சம் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்வே  மின்னல். மேகத்தில் இருக்கும் அணுக்கள் பல வழிகளில்  உராய்ந்து மின்னூட்டம் பெறுகிறது. இப்படி மின்னூட்டம் பெரும் அணுக்கள் எதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும் பொழுது, மின் ஈர்ப்பு விசை காரணமாக காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கிறது . இவ்வாறு காற்றின் வழியே மின்னூட்டம் பாயும் பொழுது மின்பொறியாக ஒளிவிடுகிறது. மின்னல் பெரும்பாலும் நீலம் கலந்த வெள்ளை நிறத்தில் உருவாகும். மின்னல் சில நேரங்களில் மரத்தையோ அல்லது நில பகுதியில் வாகனங்களையோ அல்லது மனிதர்களையோ தாக்கும். இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
 

Image result for man made lightning

மின்னலின் வகைகள் : 

மேகத்திலிருந்து புவியில் முடிவடையும் மின்னல் புவி மின்னல் எனவும்,மேகத்திற்குள் தொடங்கி மேகத்திற்குள்ளேயே முடிவடையும் மின்னல் முகில் மின்னல் என்றும் இறுதியாக மிகவும் அரிதாக அறியப்படும் மேகத்தில் தொடங்கி வளியில் முடிவடையும் மின்னல் வளி மின்னல் எனவும் மின்னல் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 

மின்னலிலிருந்து மின்சாரம் எடுக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்: 

மின்சாரத்தை முதன் முதலில் உலகுக்கு தெரிவித்தவர் மைக்கேல் பாரடே. காந்தமும் கம்பிச் சுருளும் தழுவும்போது மின்சாரம் உருவாகிறது என்ற கோட்பாட்டில் வெப்பம், காற்று,நீர் என அனைத்திலிருந்தும் மின்சாரம் தயாரிக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தது.

இந்நிலையில் பழம்பெரும் விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்கிளின் மழை நேரத்தில் பட்டம் விடும்பொழுது, மின்னல் ஏற்பட்டதில் பட்டம் விடும் நூல் வழியே மின்சாரத்தை உணர்ந்ததாக அவர் கூறினார். அன்றிலிருந்து மின்னலிலிருந்து மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று விஞ்ஞானிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 

Image result for மின்னலிலிருந்து மின்சாரம்

லேசர் மூலம் மின்னல் : 

தற்போது, லேசர் அலைக்கற்றை மூலம் மேகமூட்டத்தில் செயற்கை மின்னலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இரு மேகக்கூட்டம் ஒன்றையொன்று கடக்கும் போது அதிக திறன் வாய்ந்த  லேசர் அலைக்கற்றை மேகத்தை நோக்கி செலுத்தப்பட்டது. மிக குறுகிய கால இடைவெளியில் லேசரை வேகமாக செலுத்தப்பட்டதால், பிளாஸ்மா மின்னூட்டம் உருவாகி மின்னல் ஏற்பட்டது. இந்த நிகழ்வு இயற்பியல் வரலாற்றில் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு மின்னலிலிருந்து மின்சாரம் தயாரிக்க உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை விட 40 மடங்கு அதிகம் மின்சாரத்தை மின்னல் பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 

Image result for man made lightning using laser

.

 

News Counter: 
100
Loading...

youtube