ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பது வரம்பு மீறிய செயல்..அப்பலோ குற்றச்சாட்டு..!

share on:
Classic

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வரம்புகளை மீறி செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பலோ மருத்துவமனை குற்றம்சாட்டியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், விசாரணை ஆணையம் வரம்பை மீறி விசாரணை நடத்துவாத வாதாடினார். மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறாத ஆணையம், நிபுணத்துவம் பற்றி விசாரணை நடத்துவது தவறு என அப்பலோ  மருத்துவமனை வழக்கறிஞர் வாதிட்டார். 

அரசியல் காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம், பாரபட்சமாக செயல்படுவதாகவும், 18 ஆலோசகர்கள், 6 எய்ம்ஸ் மருத்துவர்கள், 12 பிற மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார். போதுமான சிகிச்சை வழங்கப்பட்டதா என ஆணையம்,  விசாரிப்பது வரம்பு மீறிய செயல் எனவும் அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

 

News Counter: 
100
Loading...

sajeev