
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், விசாரணைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை ஆணையத்தின் முன்பு, சசிகலா குடும்பத்தினர், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி 24-ம் தேதியுடன் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், கால அவகாசத்தை நீட்டிப்பு செய்யக் கோரி தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுவரை 3 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது 4-வது முறையாக கால அவகாசம் கோரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.