ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம்

share on:
Classic

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து இந்த ஆணையம் விசாரிக்க தடை கோரி, அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில், 21 துறைகளை சேர்ந்த தன்னிச்சையான மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும், அதுவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராக அப்பல்லோ மருத்துவமனை தரப்புக்கு விலக்கு அளிக்கவேண்டும் எனவும் கோரப்பட்டது. 

இந்த வழக்கு  நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பல்லோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு  விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் கோரினார். இதனை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஆணையம் தன் விசாரணையை தொடர தடையில்லை என தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

aravind