புதுமாப்பிள்ளை ஆர்யாவின் அடுத்த படம் டெடி..!!

share on:
Classic

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஆர்யா.  பல வெற்றி படங்களில் நடித்திருக்க இவர் சமீபத்தில் காப்பான் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஆர்யா & சயீஷா திருமணம் சமீபத்தில் ஹைதெராபாத்தில் கோலாகலமா நடந்தது இந்த திருமண விழாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துக்கொண்ட நிலையில் அவருடைய அடுத்த பட தகவலையும் வெளியிட்டுள்ளது. ஆர்யாவின் அடுத்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துருந்த நிலையில் இந்த படத்திற்கு 'டெடி' என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டரும் வெளியிட்டுள்ளது படக்குழு.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி, மற்ற நட்சத்திரங்கள் பற்றிய  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற வித்யாசமான படங்களை இயக்கிய சக்தி செளந்திரராஜன் இயக்கும் படம் என்றதுனாலே இந்த டெடி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan