என்எஸ்இயின் தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா

share on:
Classic

தேசிய பங்கு சந்தையின் தலைவராக 2016-ம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டவர் அசோக் சாவ்லா. தற்போது இவர் பதவி விலகியுள்ளார்.உடனே இது நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

அசோக் சாவ்லா : 

1972-ம் ஆண்டு டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பல்கலை கழகத்தில் முதுகலை பயின்றார். குஜராத்தில் தனது வாழ்க்கையை தொடங்கிய அசோக் சாவ்லா பல முக்கிய பதவிகளில் பொறுப்பேற்று உயர்ந்த நிலையில் உள்ளார். திருமணமான இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும்  பெருநிறுவன வழக்கறிஞர்களாக உள்ளனர். வாசிப்பு மற்றும் இசையில் அசோக் சாவ்லாவிற்கு ஆர்வம் அதிகம்.

அசோக் சாவ்லா வகித்த பதவிகள்: 

பெருநிறுவன யுக்தி இவரை உயர்பதவி வகிக்க செய்தது. அரசாங்க வேலைகளின் பல முக்கிய பதவி வகித்துள்ளார்.

1980-ல் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

1998 -2011 வரை மத்திய அரசின் பல முக்கிய மூத்த பதவிகளில் பணியாற்றினார்.

நிதி பொருளாதார விவகாரம்,விமான போக்குவரத்து போன்ற இந்திய அரசின் அமைச்சரகங்களின் நிரந்தர செயலாளராக இருந்து வருகிறார்.

வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியத்தின் கூடுதல் செயலாளராகவும் பதவி வகித்தார்.

இந்திய Petrochemicals Corporation Limited-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்தின் (ONGC) இயக்குனராகவும் பணியாற்றினார்.

சிவில் சர்வீசிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர் 2011-2016 ஆண்டிற்கான இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India(CCI)) தலைவராக நியமிக்கப்பட்டார். 

2018 முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு சார்பற்ற சுயாதீன இயக்குநர் ஆனார்.

யெஸ் பேங்க் தலைவர் பதவியை வகித்து வந்த அசோக் சாவ்லா, தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைவர் பொறுப்பையும் வகித்து வந்தார்.

மார்ச் 5, 2016-ல் அவர் யெஸ் வங்கியின் சார்பில் ஒரு சுயாதீன இயக்குனராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசுடன் பல்வேறு செயலக வேலைகளில் பல்வேறு அனுபவங்கள் கொண்ட இவர் தற்போது என்எஸ்இ தலைவர் மற்றும் ஆற்றல் மற்றும் நிறுவனம் (TERI) குழுவின் தலைவராக இருந்தார்.

ashok chawla க்கான பட முடிவு

பதவியில் நெருக்கடி :

ஏர்செல் – மேக்சிஸ் ஊழல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜூலை 19-ம் தேதியன்று நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், அசோக் சாவ்லா உட்பட அரசாங்க மற்றும் உயரிய அதிகாரங்கள் கொண்ட 18 பேரது பெயர்கள் இடம் பெற்றிருந்தது. 

இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 1-ம் தேதியன்று, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இவர்கள் மீது வழக்கு பதிய, நவம்பர் 26-ம் தேதிக்குள், மத்திய அரசின் அனுமதியைப் பெற, சி.பி.ஐ.,க்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனால், சாவ்லாவுக்குப் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. மேலும் யெஸ் பேங்க் நிர்வாகமும் அவர் பதவியில் நீடிப்பதை விரும்பவில்லை என தகவல்கள் வெளியானது.

YES BANK க்கான பட முடிவு

பதவி விலகல் : 

ஏர்செல் – மேக்சிஸ் ஊழல் வழக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், நேற்று என்.எஸ்.இ.யை விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்தது.

இந்த விவகாரம் தான் அசோக் சாவ்லா பதவி விலக காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால்,அவரது ராஜினாமா குறித்து காரணங்கள் குறித்து அவர் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

NSE க்கான பட முடிவு

News Counter: 
100
Loading...

youtube