ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை தும்சம் செய்த இந்தியா

share on:
Classic

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி பிப்ரவரி 1-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது. இதில் அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் சுனில் சேதரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. அவரை தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனிருத் தபா 68-வது நிமிடத்திலும், ஜிஜி லால் பெக்லுவா 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

News Counter: 
100
Loading...

sasikanth