ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு..!

share on:
Classic

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த நீச்சல் வீரர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரும்பாக்கம் அடுத்த செனாய் நகர், ஜெயலட்சுமி காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். நீச்சல் வீரரான இவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார். அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். 

நேற்று இரவு தனது உறவினரை பார்த்துவிட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் சுப்பிரமணி என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind