அசாம், பீகார் வெள்ளம் : 170 பேர் உயிரிழப்பு, 1 கோடி பேருக்கு மேற்பட்டோர் தவிப்பு..

share on:
Classic

அசாம், பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 

வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் அசாம், பீகார் மாநிலங்களில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 104-ஐ எட்டியது. இதே போல் அசாம் மாநிலத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள பாதிப்பு காரணமாக பீகார் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 77 லட்சம் பேர் மோசமாக பாதிக்கப்பட்டனர். அசாம் மாநிலத்தில் சுமார் 31 லட்சம் பேர் சிக்கி தவித்து வருகின்றனர். 

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் விலங்குகளும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளன. அங்கிருந்த 16 காண்டாமிருகங்கள் உட்பட 187 விலங்குகள் இறந்துள்ளன. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் 757 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. 

வெள்ளம் பாதித்த மாநிலங்களில் மீட்பு கருவிகளுடன், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர். 

News Counter: 
100
Loading...

Ramya