19.12.2018 - இன்றைய ராசிபலன்

share on:
Classic

மேஷம்

மனம் மகிழும் நாள். பெரிய வாய்ப்புகள் தேடிவரும். கல்வியில் கவனம் தேவை. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். வாகனச் செலவு ஏற்படும். எதிர்ப்புகள் ஓடி ஒழியும். இசை ஆர்வம் கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. உணவுத் தொழில் உயர்வு பெறும். திட்டங்கள் எளிதாகும். புதிய தொழில் அமையும். பாராட்டுக்கள் உயரும். பயணம் அனுகூலம் தரும். இந்திர வழிபாட்டால் இன்பம் கூடும்.

ரிஷபம்

புத்துணர்வோடு செயல்படும் நாள். வெளியூர் பயணம் நன்மை தரும். வெளிநாட்டு நபரால் வெகுமதி கூடும். நண்பர்களால் நன்மை உண்டு. சுயத் தொழிலில் கவனம் தேவை. பணியில் ஆர்வம் ஏற்படும். பழைய கடன் வசூலாகும். குதூகலமான மனநிலை காணப்படும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். வீண் செலவு ஏற்படும். விவேகம் வெளிப்படும். வெளியூர் பயணம் உண்டு. ஜீவராசிகளுக்கு உணவு அளித்தால் யோக பலன் கிடைக்கும்.

மிதுனம்

எண்ணம் கை கூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். குதூகல எண்ணம் அதிகரிக்கும். குடும்ப உறவு பலப்படும். தனவரவு உண்டு. உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். உடல் நிலையில் கவனம் தேவை. திடீர் செலவு ஏற்படும். நட்பில் பிரிவு ஏற்படும். உறவினர் வருகை உண்டு. எண்ணங்கள் மாறுப்படும். தனவரவு தடைப்படும். ஷர்ப வழிபாட்டால் சச்சரவு நீங்கும்.

கடகம்

அற்புதமான நாள். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். பெற்றோர் ஆலோசனை பயன்தரும். குடும்ப பாசம் அதிகரிக்கும். உடல் வலி தோன்றி மறையும். கடன் சுமை குறையும். விருப்பமான தொழில் அமையும். உறவினர் வருகை உண்டு. பெற்றோரின் ஆசி கிடைக்கும். பேச்சில் கம்பீரம் இருக்கும். பூர்விக சொத்து கிடைக்கும். நட்சத்திர வழிபாட்டால் நன்மை உண்டு. காக வழிபாடு கர்ம்ம் போக்கும். 

சிம்மம்

பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். பெற்றோர் நலனில் அக்கறை கூடும். வாக்குவாதங்கள் உருவாகும். பணியில் கண்டிப்பு தேவை. தனவரவு அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை குறையும் நாள். தன்னம்பிக்கை துளிர்விடும். பயணத்தால் வெகுமதி கிடைக்கும். ஆபரணப் பொருள் களவுப் போகும். நெருப்பினால் அபாயம் ஏற்படும். கனி வழிபாட்டால் பிணி நீங்கும். 

கன்னி

மருத்துவ நிவர்த்தி ஏற்படும். பணியில் உயர்வு கிட்டும். பணிவும், துணிவும் கூடும். கஷ்ட காலம் மறையும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். வாகன மாற்றம் உண்டாகும். மன அமைதி சீர்குலையும். மறைமுக எதிர்ப்பு விலகும். பயணத்தால் பலன் உண்டு. தலைவலி வந்து நீங்கும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். சிவ வழிபாட்டால் சிரமம் குறையும்.

துலாம்

சுப விரயம் ஏற்படும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். பக்கத்து வீட்டு பகை மாறும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். புதிய நட்பு உருவாகும். மேன்மைகள் தொடரும். மெத்தனப் போக்கு மாறும். சுய தொழில் வாய்ப்பு அமையும். சுபச் செய்தி வரும். சந்தரப்பங்கள் சாதகமாக அமையும். திறமைகள் வெளிப்படும். முடிவுகளில் தெளிவு இருக்கும். அதி தேவதை வழிபாட்டால் ஐஸ்வர்யம் கூடும். 

விருச்சிகம்

மாற்றங்களை சந்திக்கும் நாள். எதிர்ப்பு உருவாகும். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உறவினர் வருகை உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றி பெரும். பேச்சில் பணிவு தேவை. கடன் அதிகமாகும். காரியத் தடை ஏற்படும். குரு வழிபாட்டால் குலம் தழைக்கும். 

தனுசு

பொறாமைகள் அதிகரிக்கும். கடன் கடந்த பயணம் உண்டாகும். கண்ணாடித் தொழில் முன்னேற்றம் தரும். இடமாற்றம் நன்மை தரும். குடும்ப அன்யோன்யம் கூடும். உத்தியோக உயர்வு கிட்டும். பிள்ளைகளால் பெருமை சேரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறப்புகளால் உதவி கிட்டும். அலைபேசி தகவல் ஆதாயம் தரும். சூரிய வழிபாட்டால் சூரிய பலம் கூடும். 

மகரம்

புதிய கடன் ஏற்படும். எதிரிகளால் ஏற்றம் கிட்டும். பொது வாழ்வில் புகழ் கூடும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உத்தியோக இடமாற்றம் ஏற்படும். பெண்களின் ஆலோசனை பெருமை தரும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வரும். நண்பர்களால் பிரிவு ஏற்படும். உற்சாகம் கலை கட்டும். உறவினர் வருகை உண்டு. ஆறுதலான சூழ்நிலை அமையும். ஆதித்ய வழிபாடு ஆதாயம் தரும். 

கும்பம்

யோகமான நாள். உற்சாகம் அதிகரிக்கும். பேச்சில் துணிவு தேவை. திடீர் செலவு ஏற்படும். மங்கள செய்தியால் மனம் மகிழும். அரசு வகையில் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளால் பெருமை கூடும். மனைவியால் மதிப்பு உயரும். சகோதர வகையில் சகாயம் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். தனவரவுகள் தடைப்படும். புது முயற்சிகள் தள்ளி வைக்கவும். புஷ்ப வழிபாடு புண்ணியம் சேர்க்கும்.

மீனம்

மனநிறைவு உண்டாகும். களவு போன பொருள் திரும்ப கிடைக்கும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். மாற்று இன நட்பு பெருகும். வயிற்று உபாதை வந்து சேரும். வங்கி சேமிப்பு உயரும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொல்லை தந்தவர் விலகிவிடுவர். தொழில் வளர்ச்சி மேன்மை தரும். ஆலோசனை பூர்த்தியாகும். அணிகலன் ஆர்வம் அதிகரிக்கும். கோபுர வழிபாட்டால் குடும்ப மேன்மை உண்டு.

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது .  

 

 

News Counter: 
100
Loading...

youtube