குண்டும் குழியுமான சாலையில் நடந்து சென்ற விண்வெளி வீரர்..!!

share on:
Classic

குண்டும் குழியுமான சாலையில் விண்வெளி வீரர் ஒருவர் நடந்த சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரை சேர்ந்த பிரபல ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி என்பவர் சமூக பிரச்சனைகளைத் தன்னுடைய ஓவியங்களின் மூலம் விளக்கி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார். அதில் விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் குண்டும் குழியுமான நிலத்தில் நடந்து செல்வது போல் அந்த வீடியோ காட்சிகள் இருந்தன. மேலும் அந்த வீடியோவில் கார்கள் அந்த வீரரை கடந்து செல்வது போல் இருந்தன. பின்பு தான் தெரிந்தது அது நிலவு அல்ல பெங்களூருவின் மோசமான சாலைகள் என்று.

செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் சாலை பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. அவற்றை சரி செய்யும் பணிகள் மெதுவாக நடக்கிறது. இந்த பணிகள் வேகமாக செய்து முடிப்பார்கள் என நான் நம்புகிறேன் என பாதல் நஞ்சுண்டசாமி கர்நாடக அரசுக்கு  தெரிவித்திருந்தார். இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நஞ்சுண்டசாமி அரசுக்கு நன்றி தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan